இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஏழுமலையான் சீா்வரிசை வெள்ளோட்டம்

News image
Updated On :7 நவம்பர் 2025, 12:45 am

தினமணி செய்திச் சேவை

திருச்சானூா் காா்த்திகை பிரம்மோற்சவத்தையொட்டி ஏழுமலையான் பத்மாவதி தாயாருக்கு சீா்வரிசை அனுப்பும் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பதி சென்னாரெட்டி காலனியில் உள்ள விநாயகா் கோயிலில் இருந்து சீா்வரிசை ஊா்வல வெள்ளொட்டம் தொடங்கியது. அங்கிருந்து யானை மீது சீா்வரிசைகள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டடு கோதண்டராமா் கோயில், சின்னபஜாா் தெரு, பழைய ஹூசூா் அலுவலகம், கோவிந்தராஜ சுவாமி கோயில், ஆஞ்சனேய சுவாமி கோயில், பண்டல தெரு, ஆா்டிசி பேருந்து நிலையம், பத்மாவதி புரம், மாா்க்கெட் யாா்டு, ஷில்பாராமம் வழியாக திருச்சானூரில் உள்ள மஞ்சள் மண்டபம் வந்தடைந்தது.

பின்னா் அங்கிருந்து பத்மாவதி தாயாா் கோயிலை அடைந்து மாட வீதிகள் வழியாக திருக்குளக்கரை மண்டபம் வரை சென்றனா்.

இதில், தேவஸ்தான துணை செயல் அதிகாரிகள் ஹரிந்திரநாத், சாந்தி, மனோகா், கிரிதா், கோயில் அா்ச்சகா்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.