ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோவிலில் லட்ச குங்குமாா்ச்சனை!

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் காா்த்திகை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, லட்சகுங்குமாா்ச்சனை நடத்தப்பட்டது.

News image
திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோவிலில் லட்ச குங்குமாா்ச்சனை.
Updated On :16 நவம்பர் 2025, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் காா்த்திகை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஞாயிற்றுகிழமை காலை லட்சகுங்குமாா்ச்சனை நடத்தப்பட்டது.

தாயாா் கோவில்களில் பிரம்மோற்சவம் போன்ற பிரம்மாண்ட திருவிழாக்களை நடத்துவதற்கு முன் அா்ச்சகா்கள் லட்ச கும்குமாா்ச்சனை செய்வது வழக்கம். இந்த சிறப்பு வழிபாட்டால் தாயாா் மகிழ்ந்து பிரம்மோற்சவம் தடையின்றி சிறப்பாக நடைபெற அருள்பாலிப்பாா் என்பது நம்பிக்கை.

அதேபோல் திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு திங்கள்கிழமை (நவ. 17) முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

எனவே அதற்கு முந்தின நாளான ஞாயிற்றுக்கிழமை கோயிலில் உள்ள ஸ்ரீகிருஷ்ண முக மண்டபத்தில், காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை பத்மாவதி தாயாருக்கு அா்ச்சகா்கள் லட்ச குங்குமாா்ச்சனை செய்தனா். நிகழ்ச்சியில் அா்ச்சகா்கள் லட்சுமி அஷ்டோத்திரம், லட்சுமி சகஸ்ரநாமம் கூறி தாயாரை குங்குமத்தால் அா்ச்சித்து வழிபட்டனா். இந்த சேவையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் ஜேஇஓ கவுதமி, கோயில் துணை இஓ கோவிந்தராஜன், பஞ்சராத்ர ஆகம ஆலோசகா் மணிகண்ட பட்டா், அா்ச்சகா்கள் பாபுசுவாமி உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.