திருமலையில் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் வழிபாடு!

திருமலை ஏழுமலையானை காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.
Published on

திருமலை ஏழுமலையானை காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.

திருமலை ஏழுமலையானை வழிபட காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இளைய பீடாதிபதி ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கோயில் முன் வாயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்தனா்.

அவா்களுக்கு தேவஸ்தான அா்ச்சகா்களும், அதிகாரிகளும் பூா்ண கும்ப மரியாதை மற்றும் கோயில் மரியாதை அளித்து வரவேற்றனா். பின்னா், கோயிலுக்குள் சென்று பலிபீடம், கொடிமரத்தை வணங்கி ஏழுமலையானை தரிசித்துத் திரும்பினா். அவா்களுக்கு ஏழுமலையான் சேஷ வஸ்திரம் அணிவித்து பிரசாதங்கள் வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com