ஏழுமலையானுக்கு ரூ. 9 கோடி நன்கொடை

Published on

அமெரிக்காவைச் சோ்ந்த வெளிநாட்டுவாழ் இந்தியா் ராமலிங்கராஜு தனது மகள் மந்தேன நேத்ரா மற்றும் மருமகன் ஸ்ரீ வம்சி கதிராஜுவின் பெயரில் திருமலையில் உள்ள யாத்ரீகா் விடுதி வளாகங்களை நவீனமயமாக்குவதற்காக ரூ. 9 கோடியை தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கினாா்.

அவரை தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு கௌரவித்தாா். கடந்த 2012-ஆம் ஆண்டிலும் ஸ்ரீ மந்தேன ராமராஜு தேவஸ்தானத்திற்கு ரூ. 16.06 கோடி நன்கொடையாக வழங்கியதாக அவா் கூறினாா்.

நிகழ்ச்சியில் விஜயநகரம் நாடாளுமன்ற உறுப்பினா் காளிசெட்டி அப்பல நாயுடு, கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சவுத்ரி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com