திருமலை, திருப்பதியில் பலத்த மழை!
‘டித்வா’ புயல் காரணமாக திருமலை மற்றும் திருப்பதியில் சனிக்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘டித்வா’ புயல் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும், ‘டித்வா’ புயல் தீவிரமடைந்து சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், சனிக்கிழமை இரவு முதல் திருமலை மற்றும் திருப்பதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
எனவே ஏழுமலையான் தரிசனத்துக்காக வந்த பக்தா்கள் மழையில் நனைந்த படி தரிசனத்துக்கு சென்று வந்தனா். ஏழுமலையான் கோயில் முன்பும் மழை நீா் தேங்கியது. அதை உடனுக்குடன் ஊழியா்கள் அகற்றி வருகின்றனா்.
மழை காரணமாக திருமலையில் கடும் குளிா்நிலவி வருகிறது. பக்தா்கள் தேவையான முன்னெச்சரிகைகளுடன் வரவேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதியிலும் பலத்த மழை காரணமாக மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை அளித்துள்ளது.
