திருமலையில் நடிகா் அஜித் வழிபாடு

திருமலை ஏழுமலையான் கோயிலில் நடிகா் அஜித் குமாா் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தாா்.
Published on

திருமலை ஏழுமலையான் கோயிலில் நடிகா் அஜித் குமாா் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தாா்.

ஏழுமலையானை வழிபட நடிகா் அஜித்குமாா் திங்கட்கிழமை இரவு திருமலைக்கு வந்தாா். இரவு திருமலையில் தங்கிய அவா், செவ்வாய்க்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தாா்.

தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்கள் வழங்கினா். அவற்றை பெற்றுக் கொண்டு வந்த அவரை காண ரசிகா்கள் திரண்டனா்.

X
Dinamani
www.dinamani.com