திருப்பதி
ஸ்ரீ கபிலேஸ்வர ஸ்வாமி கோயிலில் சண்டி யாகம் ஹோமம்
திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் பாரம்பரிய முறைப்படி சண்டியாகம் வியாழக்கிழமை தொடங்கியது.
காா்த்திகை மாதத்தை முன்னிட்டு (தெலுங்கு நாள்காட்டியின்படி) திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஒரு மாதம் அங்கு எழுந்தருளியுள்ள மூா்த்திகளுக்கு ஹோம மகோற்சவங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை காலை யாகசாலையில் சண்டி ஹோமம், லகுபூா்ணாஹுதி, கலச உத்வாசனம், மகாசாந்தி அபிஷேகம், காமாட்சி அம்மன் கலசாபிஷேகம் நடந்தது. இந்த சண்டி யாகம் தொடா்ந்து 11 நாள்களுக்கு நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் கோயில் துணை இஓ தேவேந்திரபாபு, அா்ச்சகா்கள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
