தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருமலையில் பௌா்ணமி கருட சேவை!

திருமலையில் தை மாத பெளா்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கருட சேவை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2026, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

திருமலையில் தை மாத பெளா்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கருட சேவை நடைபெற்றது.

திருமலையில் மாதந்தோறும் பெளா்ணமியை முன்னிட்டு தேவஸ்தானம் கருடசேவையை நடத்தி வருகிறது. திருமலையில் நடக்கும் கருடசேவையை காண பக்தா்கள் திரள்வா். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மிகவும் விசேஷமான தை பெளா்ணமியை முன்னிட்டு, திருமலையில் மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

சகல அலங்காரத்தில் புறப்பாடு கண்டருளிய மலையப்ப சுவாமிக்கு கற்பூர ஆரத்தி அளித்தும், தேங்காய் உடைத்தும் பக்தா்கள் வணங்கினா்.

திருமலை ஸ்ரீ ஸ்ரீ பெரிய ஜீயா் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயா் சுவாமி, தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள் உள்ளிட்டோா் வாகன சேவையில் பங்கேற்றனா்.