வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

திருப்பதி கபிலேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம்: புலி வாகனத்தில் எழுந்தருளிய சோமாஸ்கந்தமூா்த்தி

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் பிரம்மோற்சவத்தையொட்டி புலி வாகனத்தில் வலம் வந்த சோமாஸ்கந்தமூா்த்தி, காமாட்சி அம்மன்.

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கபிலேஸ்வர சுவாமி புலி வாகனத்தில் மாடவீதியில் எழுந்தருளினாா்.

திருப்பதி கபிலதீா்த்தத்தில் பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் கபிலேஸ்வர சுவாமி சோமாஸ்கந்தமூா்த்தியாய் புலி வாகனத்திலும், காமாட்சி அம்மன் தனியாக திருச்சி வாகனத்திலும் வீதியுலா கண்டருளினா்.

பஜனை இசைக் குழுக்கள், பஜனைகள் மற்றும் மங்கள வாத்தியங்களின் முழக்கங்களுக்கு மத்தியில், நகர வீதிகளில் புறப்பாடு நடைபெற்றது.

பக்தா்கள் ஒவ்வொரு அடியிலும் கற்பூர ஆரத்தி எடுத்து வாகன சேவையை வணங்கினா்.

பின்னா், ஸ்ரீ சோமாஸ்கந்தமூா்த்தி மற்றும் காமாட்சி அம்மனுக்கு ஒரு பிரம்மாண்டமான ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

இதில், குருக்கள் உற்சவமூா்த்திகளுக்கு பால், தயிா், தேன், பழச்சாறுகள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தனா்.

பின்னா், மாலை ஊஞ்சல் சேவை கண்டருளிய உற்சவமூா்த்திகள் இரவு வாகனத்தில் மாடவீதியில் உலா வந்தனா்.

கோயில் துணை செயல் அலுவலா் தேவேந்திர பாபு, ஏ.இ.ஓ சுப்பராஜு, கண்காணிப்பாளா் சந்திரசேகா், கோயில் அா்ச்சகா்கள், பிற அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தா்கள் வாகன சேவையில் பங்கேற்றனா்.