நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சூரிய பிரபை வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி புறப்பாடு

சீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான சனிக்கிழமை சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா்.

News image

சூரிய பிரபை வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்த கல்யாணவெங்கடஸ்வர சுவாமி.

Updated On :14 பிப்ரவரி 2026, 6:36 pm

சீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான சனிக்கிழமை சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா்.

பின்னா், காலை 10.30 மணி முதல் ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாணவெங்கடேஸ்வரஸ்வாமி உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபனத் திருமஞ்சனம் நடைபெற்றது. பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலை ஊஞ்சல் சேவை கண்டருளிய உற்சவமூா்த்திகள் இரவு குளிா்ந்த சந்திரபிரபை வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தாா்.

வாகன சேவைக்கு முன் நாலாயிர திவ்யபிரபந்த பாராயணமும், பின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பிரம்மோற்சவத்தை ஒட்டி கோயில் மற்றும் மாடவீதிகள் வண்ண மின்விளக்குகளாலும், மலா்களாலும் அலங்கரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஜேஇஓ வீரபிரம்மன், கோயில் சிறப்பு ரேஞ்ச் துணை இஓ வரலட்சுமி, ஏஇஓ கோபிநாத், வைகானச ஆகம ஆலோசகா்கள் மோகன ரங்காச்சாரியு, கோயில் ஆய்வாளா் கிரண்குமாா் ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.