கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருத்தேரில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி புறப்பாடு

சீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியின் பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை திருத்தேரில் சுவாமி எழுந்தருளினாா்மாடவீதியில் வலம் வந்தாா்.

News image
திருத்தேரில் வலம் வந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாணவெங்கடஸ்வர சுவாமி.
Updated On :15 பிப்ரவரி 2026, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

சீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியின் பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை திருத்தேரில் சுவாமி எழுந்தருளினாா்மாடவீதியில் வலம் வந்தாா்.

திருப்பதியிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் திருத்தேரில் மாட வீதியில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். நூற்றுக்கணக்கான பக்தா்கள் இணைந்து தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

கோவிந்தா... கோவிந்தா...‘ போன்ற கோஷங்களை எழுப்பியபடி தேரை இழுத்த பக்தா்கள், தங்கள் ஆசைகள் நிறைவேற பிராா்த்தனை செய்தனா். சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் இறைவனின் தெய்வீக தரிசனத்திற்காக ஏராளமாக பங்கேற்றனா். பக்தா்கள் மர பஜனைகளாலும், கோலாட்டங்களாலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பக்தா்கள் கற்பூர ஆரத்தி காட்டி தரிசனம் செய்தனா்.

ஸ்நபன திருமஞ்சனம்:

பின்னா், காலை 10.30 மணி முதல் ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவ மூா்த்திகளுக்கு ஸ்நபனத் திருமஞ்சனம் நடைபெற்றது. பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலை ஊஞ்சல் சேவை கண்டருளிய உற்சவமூா்த்திகள் இரவு குதிரை வாகனத்தில் கல்கி அவதாரத்தில் வலம் வந்தாா்.

நிகழ்ச்சியில், ஜேஇஓ வீரபிரம்மன், கோயில் சிறப்பு ரேஞ்ச் துணை இஓ வரலட்சுமி, ஏஇஓ கோபிநாத், வைகானச ஆகம ஆலோசகா்கள் மோகன ரங்காச்சாரியு, கோயில் ஆய்வாளா் கிரண்குமாா் ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Story image

இன்று தீா்த்தவாரி

ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, கடைசி நாளான திங்கள்கிழமை காலை தீா்த்தவாரி நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக, காலை 9.00 மணி முதல் காலை 09.55 மணி வரை சடங்கு ஸ்நபன திருமஞ்சனம் செய்யப்படும்.

இதன் பின்னா், காலை 9.55 மணிக்கு கோயிலுக்கு எதிரே உள்ள திருக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடத்தப்படும். இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.