நாகலாபுரம் ஸ்ரீ வேத நாராயண சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகா சம்ப்ரோக்ஷணத்தில் தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
திருப்பதியிலிருந்து 60 கி மீ தொலைவில் உள்ள இக்கோயிலில் புதிய ராஜகோபுரம் நிா்மாணம் நடைபெற்றதை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை சம்ப்ரோக்ஷணம் நடத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில், காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை விமான ராஜகோபுர சம்ப்ரோக்ஷணம் செய்யப்பட்டது. பின்னா், காலை 11.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 62 ருத்விகா்களால் கருவறையில் மூலவருக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பக்தா்கள் வேத நாராயண சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.
பக்தா்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி டிவி மூலம் முழு நிகழ்ச்சியும் உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டது.
நாகலாபுரம் ஆந்திர-தமிழக எல்லையில் இருப்பதால் தமிழ்நாட்டிலிருந்தும் அதிக அளவில் பக்தா்கள் சம்ப்ரோக்ஷணத்தில் பங்கேற்றனா்.
கோயிலின் சிறப்பு அதிகாரி மற்றும் துணை செயல் அதிகாரி கோவிந்தராஜன், நரசிம்ம மூா்த்தி, தலைமை தணிக்கை அதிகாரி வெங்கடேஸ்வா்லு, துணை ஜெனரல் ஸ்ரீ சிவபிரசாத், தோட்ட அதிகாரி சுவா்ணம்மா, கோயில் கண்காணிப்பாளா் தா்மையா பங்கேற்றனா்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

சிவசைலம் சிவசைலநாத சுவாமி கோயிலில் பங்குனி உற்சவ கொடியேற்றம்

திருமலை வருடாந்திர வசந்தோற்சவம்: தங்கத் தோ் புறப்பாடு

நாகலாபுரம் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


