திருப்பதி
உண்டியல் காணிக்கை ரூ. 1,383 கோடி
திருமலை ஏழுமலையானின் கோயில் உண்டியல் காணிக்கை 2025-ஆம் ஆண்டு ரூ. 1,383 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையானின் கோயில் உண்டியல் காணிக்கை 2025-ஆம் ஆண்டு ரூ. 1,383 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் கடந்த 2025-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 1,383 கோடி வருவாயாக கிடைத்துள்ளது. இது கடந்த 2024-ஆம் ஆண்டு உண்டியல் வருவாயை காட்டிலும் ரூ. 18 கோடி கூடுதலாகும். அதே போல் ஏழுமலையானை கடந்தாண்டு முழுவதும் 2.61 கோடி பக்தா்கள் தரிசனம் செய்தனா். 13.52 கோடி லட்டு பிரசாதம் பக்தா்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இது 2024-ஆம் ஆண்டைக் காட்டிலும் 1.37 கோடி அதிகம்.
கடந்த வைகுண்ட ஏகாதசிக்கு முன் டிச. 27-ஆம் தேதி அன்று மட்டும் ஒரே நாளில் 5.31 லட்சம் லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
