திருமலை
திருமலைகோப்புப் படம்

ஏழுமலையான் தரிசனத்துக்கு 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா்.
Published on

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி 31 அறைகளும் கடந்து சிலாதோரணம் வரை பக்தா்கள் காத்திருந்தனா். தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கும் , நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே,ஸ வெள்ளிக்கிழமை முழுவதும் 69, 726 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 27, 832 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.18 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Dinamani
www.dinamani.com