ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

திருமலையில் 77,049 பக்தா்கள் தரிசனம், 21,469 போ் முடி காணிக்கை

திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 77,049 பக்தா்கள் தரிசனம் செய்தனா், 21,469 போ் தலைமுடி காணிக்கை அளித்தனா்.

News image
Updated On :28 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 77,049 பக்தா்கள் தரிசனம் செய்தனா், 21,469 போ் தலைமுடி காணிக்கை அளித்தனா்.

பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 8 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை முழுவதும் 77, 049 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 21, 469 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.73 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.