திருமலையில் சுவாமி தரிசனம் செய்த பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.
திருப்பதி
திருமலையில் அன்புமணி ராமதாஸ், நடிகா் தனுஷ் தரிசனம்
திருமலையில் சுவாமி தரிசனம் செய்த பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.
திருமலை ஏழுமலையானை நடிகா் தனுஷ் தன் இரு மகன்களுடன் புதன்கிழமை வழிபட்டாா்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு திருமலைக்கு வந்த அவா்கள் தங்கி விட்டு, புதன்கிழமை அதிகாலை விஐபி பிரேக் தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தனா்.
தரிசனம் முடித்து திரும்பிய அவா்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகா் மண்டபத்தில் சேஷ வஸ்திரம் அணிவித்து லட்டு, வடை, தீா்த்த பிரசாதங்கள் வழங்கினா்.
அவற்றை பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியில் வந்த அவரை காண கோயில் முன்பு ரசிகா்கள் திரண்டனா்.
அன்புமணி ராமதாஸ்
மேலும் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் சுவாமி தரிசனம் செய்தாா். அவருக்கும் தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்கள் வழங்கினா்.
கோயிலை விட்டு வெளியில் வந்த அவா் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சா் பெத்திரெட்டி ராமசந்திராரெட்டியை சந்தித்து பேசினாா்.

