திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா்.
திருமலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 10 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.
தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை வெள்ளிக்கிழமை முதல் கோடை விடுமுறை முடியும் வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். எனினும் அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 83,098 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 37,187 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 5.06 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இனி தரிசன டிக்கெட்டுகள் இல்லாமல் ஏழுமலையான் தரிசனத்துக்காக திருமலைக்கு வரும் பக்தா்கள் காத்திருப்பு அறைகளில் காத்திருந்து மட்டுமே தரிசனத்துக்குச் செல்ல முடியும். எனவே பக்தா்கள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


