இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஏழுமலையான் தரிசனம்: 30 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருந்தனா்.

News image

திருமலை - கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 3:39 am IST

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருந்தனா்.

கோடை விடுமுறையை ஒட்டி பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி 31 அறைகளும் நிறைந்தன.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 30 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை கோடை விடுமுறை முடியும் வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, புதன்கிழமை முழுவதும் ஏழுமலையானை 86,312 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 44,107 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.94 கோடி வசூலானதுஎன தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.