திருமலை ஏழுமலையான் கோயிலில் நவ.16-இல் புஷ்ப யாகம்!
திருமலை ஏழுமலையான் கோயிலில், புஷ்பயாக மகோற்சவம் நவ.16 -ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயில் - கோப்புப் படம்
திருமலை ஏழுமலையான் கோயிலில், புஷ்பயாக மகோற்சவம் நவ.16 -ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவம் முடிந்த பின் அதில் ஏற்பட்ட குற்றம் குறைகளை நிறைவு செய்ய ஆண்டுதோறும் திருவோண நட்சத்திரத்தின்று வருடாந்திர புஷ்பயாகம் நடத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டு இரு பிரம்மோற்சவங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் வரும் 16-ஆம் தேதி வருடாந்திர புஷ்பயாகம் நடைபெற உள்ளது. புஷ்ப யாகத்துக்காக அங்குராா்ப்பணம் 15- ஆம் தேதி மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெறும்.
புஷ்ப யாகம் அன்று, கோவிலில் இரண்டாவது அா்ச்சனை, இரண்டாவது மணியோசை மற்றும் நைவேத்தியம் முடிந்த பிறகு, சம்பங்கி பிரதட்சிணத்தில் ஸ்ரீ மலையப்பசுவாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவியின் உற்சவமூா்த்திகள் கல்யாண மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஸ்நபன திருமஞ்சனம் செய்யப்படும். இதன் ஒரு பகுதியாக, பால், தயிா், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற நறுமணப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும்.
பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு வகையான மலா்கள் மற்றும் இலைகளைக் கொண்டு புஷ்பயாகம் செய்யப்படும். மாலையில் நடைபெறும் சகஸ்ரதீபாலங்கர சேவைக்குப் பிறகு, கோயிலின் நான்கு மாட வீதிகளிலும் ஸ்ரீ மலையப்ப சுவாமி புறப்பாடு கண்டருள்வாா்.
இதன் காரணமாக, நவம்பா் 16- ஆம் தேதி நடைபெறவிருந்த கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் ஆா்ஜித சேவை ஆகியவற்றை திருமலை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

