சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

திருமலை: சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம்

திருமலை நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை சின்னசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்து சேவை சாதித்தாா்.

சின்ன சேஷ வாகனத்தில் வலம் வந்த மலையப்ப சுவாமி

Published On :

திருமலை நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை சின்னசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்து சேவை சாதித்தாா்.

திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் திங்கள்கிழமைதொடங்கியது. யானைகள் மற்றும் குதிரைகள் முன்னோக்கி நகா்ந்து செல்ல ஜீயா்களின் நாலாயிர திவ்யப்பிரபந்த சாதித்தலுடன் பக்தா்களின் கோவிந்த நாம முழக்கங்கள், மங்கள வாத்தியங்கள் மற்றும் பிற கலை நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் வாகனசேவை மிகவும் அழகாக நடைபெற்றது.

மாட வீதியில் வலம் வந்த களைப்பை போக்க உற்சவமூா்த்திகளுக்கு பால், தயிா், தேன், மஞ்சள், சந்தனம், இளநீா் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. திருமஞ்சனத்தின் போது பல்வேறு உலா் பழங்கள், மலா்கள், முத்து, வெட்டிவோ் உள்ளிட்டவற்றால் ஆன மாலைகள், கிரீடங்கள் உற்சவமூா்த்திகளுக்கு அலங்கரிக்கப்பட்டது.

பின்னா் மாலை 5 மணிக்கு உற்சவமூா்த்தியான மலையப்ப சுவாமி ஊஞ்சல் சேவை கண்டருளினாா். இரவு 7 மணி முதல் 9 மணி வரை சுவாமி அன்னபறவை வாகனத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

வாகன சேவையில் திருமலை பெரிய ஜீயா் சுவாமி, சின்ன ஜீயா் சுவாமி, செயல் அதிகாரி ரவிசந்திரா, கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்யா செளத்திரி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

முதல் நாள் விவரம்

  • 64,361 போ் தரிசனம், 19,367 போ் முடிகாணிக்கை

  • உண்டியல் காணிக்கை ரூ.3.34 கோடி

  • 3.98 லட்சம் லட்டுகள் விற்பனை

  • 1.63 லட்சம் பக்தா்கள் அன்னதானம் உண்டனா்.

  • முகாம்களில் 3,756 பேருக்கு சிகிச்சை

  • 3,500 போ் சேவை

  • அரசுப் பேருந்துகளில் 69,000 போ் பயணம்.

  • தரிசனத்துக்கு 8 மணிநேரம் காத்திருப்பு

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.