திருவண்ணாமலை அருகே விவசாயியிடம் வழிப்பறி செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையை அடுத்த நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம் (55). இவர், வியாழக்கிழமை மாலை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
பள்ளிகொண்டாப்பட்டு கூட்டுச் சாலை அருகே வந்தபோது அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், ஆறுமுகத்தை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். மேலும் ஆறுமுகத்திடம் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு தப்பியுள்ளார்.
இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து வழிப்பறியில் ஈடுபட்டதாக பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலுவைக் (25) கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.