தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

முழு மது விலக்கு கோரி மதிமுக பேரணி

தமிழகத்தில் முழு மது விலக்கை அமல்படுத்தக் கோரி, திருவண்ணாமலையில் மதிமுகவினர் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தினர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:17 am

தினமணி

தமிழகத்தில் முழு மது விலக்கை அமல்படுத்தக் கோரி, திருவண்ணாமலையில் மதிமுகவினர் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தினர்.
திருவண்ணாமலை, பெரியார் சிலை எதிரில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் சீனி.கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் டி.ராஜா பேரணியை தொடக்கி வைத்தார். அண்ணா சிலை, காந்தி சிலை, திருவூடல் தெரு உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி காமராஜர் சிலை எதிரே நிறைவடைந்தது. பேரணியில், இலங்கைத் தமிழர் படுகொலையில் ஈடுபட்ட இலங்கை அரசிடம் ஐ.நா. விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஐ.நா. மன்ற 24-ஆவது அமர்வில் நடக்கும் ஓட்டெடுப்பில் இலங்கைக்குக் எதிராக இந்திய அரசு வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மதிமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பாசறை பாபு, மாவட்டத் தலைவர் பெருமாள்சாமி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.