சகோதரி நிவேதிதையின் 150-ஆவது பிறந்த நாள் விழா
செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் சகோதரி நிவேதிதையின் 150-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.


செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் சகோதரி நிவேதிதையின் 150-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா அறக்கட்டளை நிர்வாகக் குழுத் தலைவர் எஸ்.பாண்டுரங்கன் தலைமை வகித்தார். செயலர் ராமமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ரோட்டரி சங்கத் தலைவர் குப்புசாமி, செயலர் சர்தார்ரூல்லா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா அறக்கட்டளை நிர்வாகிகள், ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் ஏழுமலை நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...