47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கால்நடை ஆராய்ச்சி மையம் சார்பில் விவசாயிகளுக்கு பயிலரங்கு

திருவண்ணாமலை கால்நடைப்   பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை ஆகியவை

News image
Updated On :9 நவம்பர் 2017, 3:22 am

DIN

திருவண்ணாமலை கால்நடைப்   பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை ஆகியவை சார்பில் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிலரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத் தலைவரும், இணைப் பேராசிரியருமான சா.தியோபிலஸ் ஆனந்த்குமார் தலைமை வகித்தார். கால்நடைத் துறை இணை இயக்குநர் பி.குருமூர்த்தி முன்னிலை வகித்தார்.
கோட்டாட்சியர் இரா.உமா மகேஸ்வரி பயிலரங்க மலரை வெளியிட்டு, பயிலரங்கைத் தொடக்கிவைத்தார்.
இதில், துணை ஆட்சியர் (பயிற்சி) து.சுரேஷ், மாவட்ட துணை இயக்குநர் (நிர்வாகம்) த.மனோகரன், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் து.சரத் ஆகியோர் விவசாயிகளுக்கு பல்வேறு தொழில்நுட்பங்களை விளக்கிப் பேசினர்.
இதில், திருவண்ணாமலை கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி, ஆராய்ச்சி மையத்தின் உதவிப் பேராசிரியர் சி.எம்.ஜெய்காந்த் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.