திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் ரூ. 9.54 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பொதுமக்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கல்வி உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 522 மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் இருக்கும் மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி
உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் சிறு, குறு தொழில் வங்கிக் கடன் மானியமாக ரூ. 10 ஆயிரம் வீதம் 67 பேருக்கு ரூ. 6 லட்சத்து 70 ஆயிரமும், திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 4 பேருக்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரமும், 56 கிராம் தங்க நாணயங்களும், மேலும் 8 பேருக்கு ரூ. 24 ஆயிரத்தில் சக்கர நாற்காலிகள், 2 பேருக்கு ரூ. 10,800 மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலிகள் என மொத்தம் ரூ. 9.54 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குநர் ப.ஜெயசுதா, கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நல அலுவலர் எஸ்.பானு, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலர் ஜான்சி உள்ளிட்ட அரசுத் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஃபினிஷர் ரோல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது: அஷுத்தோஷ் சர்மா
கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப்

நீட் தோ்வா்கள் செய்ய வேண்டியது என்ன?

ஜம்முவில் கட்டுமானப் பாலம் இடிந்து விழுந்ததில் சிக்கிய 3 தொழிலாளர்கள் பலி!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

