யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

ஃபினிஷர் ரோல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது: அஷுத்தோஷ் சர்மா

அணிக்காக போட்டிகளை ஃபினிஷராக வென்று கொடுப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தில்லி கேபிடல்ஸ் வீரர் அஷுத்தோஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

News image

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அஷுத்தோஷ் சர்மா - படம் | AP

Updated On :2 மே 2026, 4:44 pm IST

அணிக்காக போட்டிகளை ஃபினிஷராக வென்று கொடுப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தில்லி கேபிடல்ஸ் வீரர் அஷுத்தோஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நேற்று (மே 1) நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது. இதன் மூலம் தொடர்ச்சியாக ஏற்பட்ட மூன்று தோல்விகளிலிருந்து மீண்டு தில்லி கேபிடல்ஸ் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது.

226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தில்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் மற்றும் பதும் நிசங்கா சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். கே.எல்.ராகுல் 75 ரன்களும், பதும் நிசங்கா 62 ரன்களும் எடுத்தனர். ஆட்டத்தின் இறுதியில் அஷுத்தோஷ் சர்மா 15 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்த நிலையில், அணிக்காக போட்டிகளை ஃபினிஷராக வென்று கொடுப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அஷுத்தோஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: என்னுடைய அணிக்காக போட்டிகளை ஃபினிஷராக வென்று கொடுப்பதை மகிழ்ச்சியுடன் செய்கிறேன். முக்கியமான தருணங்களில் அணி நிர்வாகம் என் மீது நம்பிக்கை வைத்து என்னை களமிறக்குகிறது. இது போன்ற முக்கியமான தருணங்களில் விளையாடுவதை நானும் விரும்புகிறேன். நான் நீண்ட நேரம் களத்தில் நிலைத்து நின்று ஆடினால், என்னுடைய அணிக்காக போட்டியை வென்று கொடுக்க முடியும் என்பதை எப்போதும் நம்புகிறேன்.

தற்போது டி20 போட்டிகளில் வெற்றி பெறுவது தொடக்க ஆட்டக்காரர்கள் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதைப் பொருத்தும், பவர்பிளேவில் குவிக்கப்படும் ரன்களைப் பொருத்தும் அமைகிறது. எங்கள் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் மிக நன்றாக விளையாடினார்கள் என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள தில்லி கேபிடல்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Delhi Capitals player Ashutosh Sharma has stated that winning matches for the team as a finisher brings him immense joy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.