
ஜடேஜா சாதனையை சமன்செய்த கே.எல். ராகுல்..! அடுத்து தோனி சாதனைதான்!
ஆட்ட நாயகன் விருது வென்ற கே.எல். ராகுல் நிகழ்த்திய சாதனை குறித்து...

அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் கே.எல். ராகுல். - படம்: ஏபி
தில்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் (34 வயது ) ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்த விருதுடன் 17 முறை ஐபிஎல் தொடரில் ஆட்ட நாயகன் விருது வென்று ஜடேஜாவை சமன்படுத்தியுள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 225/6 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தில்லி அணி 19.1 ஓவர்களில் 226/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் தில்லி அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் அதிரடியாக விளையாடினார். 40 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் 90 ரன்கள் அடித்தும் தோல்வியுற்றதால், ஆட்ட நாயகன் விருது கே.எல். ராகுலுக்கு வழங்கப்பட்டது.
எம்.எஸ். தோனி 18 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். ஜடேஜாவை சமன்செய்த கே.எல். ராகுல் இந்த ஐபிஎல் தொடரிலேயே தோனியின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.
ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள்
1. ரோஹித் சர்மா - 21
2. விராட் கோலி - 20
3. எம்.எஸ். தோனி - 18
4. ரவீந்திர ஜடேஜா - 17
5. கே.எல். ராகுல் - 17
ððð¨ð©ðð§ð¨ ð¤ð ð©ðððð§ ðð§ððð© ð¨
— IndianPremierLeague (@IPL) May 2, 2026
KL Rahul climbs up the ranks in an elite list of match-winners ðªð«¡#TATAIPL | #KhelBindaas pic.twitter.com/SH32dvY0TA
Summary
KL Rahul climbs up the ranks in an elite list of match-winners
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







