ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரவீந்திர ஜடேஜா தனது ஆட்ட நாயகன் விருதை குஜராத் கல்வி அமைச்சருக்குச் சமர்ப்பித்தது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
நேற்றிரவு லக்னௌவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 159/6 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 18 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் 43 ரன்கள் குவித்தார். பந்துவீச்சில் 1 விக்கெட் வீழ்த்தினார். இந்தச் சிறப்பான செயல்பாடுகளால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
ஆட்ட நாயகன் விருது வென்ற ஜடேஜா, “ ஆட்ட நாயகன் விருது வென்றது நன்றாக இருக்கிறது. இந்த விருதை குஜராத் கல்வி அமைச்சருக்குச் சமர்ப்பிக்கிறேன். ஏனெனில் நேற்று அவர் என்னிடம் நீங்கள் நன்றாக விளையாடுவீர்கள் எனக் கூறினார். நானும் அதேபோல் இன்று விளையாடினேன்” என்றார்.
குஜராத்தின் கல்வி அமைச்சராக அவரது மனைவி ரவிபா ஜடேஜா பொறுப்பில் இருக்கிறார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கேபினட்டை மாற்றியமைக்கும்போது ரிவாபாவைதொடக்க, இடைநிலை கல்வி அமைச்சராக மாற்றினார்.
கடந்த 2022 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜடேஜா தனது மனைவிக்காக பிரசாரம் செய்தார். ஜாம்நகர் வடக்கில் ரவிபா ஜடேஜா வென்றதும் குறிப்பிடத்தக்கது.
Summary
Why Ravindra Jadeja dedicated his POTM award to Gujarat's Education Minister after RR beat LSG.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வைபவ் சூர்யவன்ஷியின் தாரக மந்திரம் என்ன? ஆட்ட நாயகன் விருதுக்குப் பிறகு பேட்டி!

பயிற்சிதான் காரணம்... ஆட்ட நாயகன் முகமது சிராஜ் பேட்டி!

தன்னம்பிக்கை நாயகன்: சீசனில் முதல் பேட்டிங் வாய்ப்பிலேயே ஆட்ட நாயகன் விருதுவென்ற மணீஷ் பாண்டே!

ஜடேஜா சாதனையை சமன்செய்த கே.எல். ராகுல்..! அடுத்து தோனி சாதனைதான்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



