கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் மணீஷ் பாண்டேவுக்கு இந்த சீசனில் முதல்முறையாக பேட்டிங் வாய்ப்பு கிடைத்து, அதில் அவர் ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
ஐபிஎல் தொடங்கியது முதல் விளையாடிவரும் மணீஷ் பாண்டே (36 வயது) அதிகமான வாய்ப்பு கிடைக்காத வீரராகவே இருந்து வருகிறார்.
நேற்றிரவு ஈடர்ன் கார்டன் திடலில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 147/8 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கொல்கத்தா 18.5 ஓவர்களில் 148/6 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் மணீஷ் பாண்டே 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். நான்காவது போட்டியில் விளையாடிய அவருக்கு இந்தப் போட்டியில்தான் முதல்முறையாக பேட்டிங் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் உழைத்துக்கொண்டே இருக்கும் மணீஷ் பாண்டே குறித்து சமூக வலைதளத்தில் தன்னம்பிக்கை, உத்வேகம் மிகுந்த பதிவுகள் அதிகரித்து வருகின்றன.
கேகேஆர் அணியின் கேப்டன் ரஹானே, “போட்டிகளில் விளையாடாதபோதும் மணீஷ் பாண்டேவின் உழைப்பும் அவரது அணுகுமுறையும் மிகவும் சிறப்பாக இருந்தது” என்றார்.
Summary
The Epitome of Self-Confidence: Manish Pandey—Winner of the 'Man of the Match' Award in His Very First Batting Opportunity of the Season!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வித்தியாசமான கொண்டாட்டத்துக்குக் காரணம் அம்மாதான்... மனம் திறந்த சூர்யவன்ஷி!

நான் 100% பந்துவீச்சாளர், 100% பேட்டர்..! ஆட்ட நாயகன் விருது வென்ற மாதவ் திவாரி!

ஆர்சிபியை வீழ்த்தியது எப்படி? ஆட்ட நாயகன் மிட்செல் மார்ஷ் பேட்டி!

இந்த சீசனின் சிறந்த பந்துவீச்சு..! ஜேமி ஓவர்டனுக்கு ஆட்ட நாயகன் விருது தராதது ஏன்?
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



