சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!பேரவைத் தலைவரை கரம்பிடித்து அமரவைக்கும் சம்பிரதாயம்! முதல்வர் விஜய் கூறிய குட்டிக்கதைஎல்பிஜி சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும்! குறுந்தகவல் சொல்வது என்ன?50 கார்களில் அணிவகுத்த பாஜகவின் சௌபாக்ய சிங் தாகூர்! இதுதான் சிக்கனமா?நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை! உச்ச நீதிமன்றத்தில் தவெக எம்எல்ஏ மேல்முறையீடு! தவெகவுக்கு ஆதரவு! எம்.எல்.ஏ. காமராஜ் அமமுகவிலிருந்து நீக்கம்!நீட் தேர்வில் ஸ்கேம் இல்லை; நீட்டே ஒரு ஸ்கேம்தான்! - ஸ்டாலின்நீட் மறுதேர்வுக்கு கட்டணம் இல்லை! செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்! மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து!
/

நான் 100% பந்துவீச்சாளர், 100% பேட்டர்..! ஆட்ட நாயகன் விருது வென்ற மாதவ் திவாரி!

ஆட்ட நாயகன் விருது வென்ற தில்லி கேபிடல்ஸ் அணியின் அறிமுக வீரர் குறித்து...

News image

ஆட்ட நாயகன் விருது வென்ற மாதவ் திவாரி. - படங்கள்: ஏபி, ஐபிஎல்.

Updated On :1 மணி நேரம் முன்பு

ஆட்ட நாயகன் விருது வென்ற தில்லி கேபிடல்ஸ் அணியின் இந்த சீசனில் முதல் போட்டியில் விளையாடிய மாதவ் திவார் தன்னை 100 சதவிகிதம் பந்துவீச்சாளர் என்றும் 100 சதவிகிதம் பேட்டர் என்றும் கூறலாம் எனப் பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

நேற்றிரவு நடந்த ஐபிஎல் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 20 ஓவர்களில் 210/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தில்லி அணி 19 ஓவர்களில் 216/7 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் தில்லி வீரர் மாதவ் திவாரி பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளும் பேட்டிங்கில் 8 பந்துகளில் 18 ரன்களும் அடித்து அசத்தினார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் 2025 ஐபிஎல் சீசனில் மும்பைக்கு எதிரான போட்டியில் முதல்முறையாகவும் கடைசியாகவும் விளையாடினார். பின்னர், இந்த சீசனில் முதல்முறையாக பஞ்சாப் அணிக்கு எதிராக களம்கண்டார்.

பேட்டிங், பந்துவீச்சு என அசத்தி ஆட்ட நாயகன் விருதுவென்ற மாதவ் திவாரி பேசியிருப்பதாவது:

எனக்கு வாய்ப்பளித்த நிர்வாகத்துக்கு நன்றி. வெற்றிப் பெற்ற அணியில் இருப்பது மகிழ்ச்சி. வாய்ப்பு கிடைக்காதபோது பயிற்சியில் ஒவ்வொரு முறையும் முன்னேற்றம் அடைய முயற்சிக்க வேண்டும்.

முனாஃப் படேல் உடன் இணைந்து அதிகமாக பயிற்சி எடுத்தேன். பந்துவீச்சிலும் உழைத்தேன். பேட்டிங் பயிற்சியாளருடன் இணைந்து என்னுடைய ரேஞ்சில் இருந்தால் அடிக்கும் பழக்கத்தை அதிகரித்தேன். அணிக்குப் பங்களிப்பதில் மகிழ்ச்சி.

என்னைப் பொறுத்தவரை நான் 100 சதவிகிதம் பந்துவீச்சாளர், 100 சதவிகிதம் பேட்டர் என்பேன். இந்த ஆடுகளத்தில் லெந்த் பந்துகளுக்கு நல்ல உதவியாக இருந்தது. அதனால், அப்படியே பந்துவீசினேன். அதில் வைடு பந்துகளையும் ஷார்டு பந்துகளையும் கலந்து வீசினேன்.

நான் 4 ஓவர்கள் பந்துவீசியதில் ஆச்சரியமில்லை. நான் ஏற்கெனவே இதற்காக தயாராகி இருந்தேன். என்னுடைய இரண்டாவது ஓவரில் ரன்கள் சென்றிருந்தால் அக்‌ஷர் படேல் வீசியிருப்பார். அதிஷ்டவசமாக நன 4 ஓவர்களை வீசினேன்.

என்னுடைய பேட்டிங் பயிற்சியாளர் ஐயான் பெல் என்னிடம் நல்ல பவர் இருக்கிறது. அதனால், வித்தியாசமாக எதுவும் செய்யாமல் உறுதியாக நின்று, பந்துகளைப் பார்த்து விளையாட வேண்டும் என்றார்.

Summary

I would like to say I’m 100% bowler, 100% batsman says DC Player of the Match Madhav Tiwari.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.