பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஆர்சிபியை வீழ்த்தியது எப்படி? ஆட்ட நாயகன் மிட்செல் மார்ஷ் பேட்டி!

ஆட்ட நாயகன் விருது வென்ற மிட்செல் மார்ஷ் பேசியிருப்பதாவது...

Lucknow Super Giants' Mitchell Marsh celebrates his century during the Indian Premier League cricket match between Royal Challengers Bengaluru and Lucknow Super Giants in Lucknow, India, Thursday, May 7, 2026. (AP Photo)

சதம் அடித்த மகிழ்ச்சியில் மிட்செல் மார்ஷ். - படம்: ஏபி

Published On :

ஆட்ட நாயகன் விருது வென்ற மிட்செல் மார்ஷ், “இந்த சீசனில் சரியாக செல்லாவிட்டாலும் இன்னும் சில போட்டிகள் இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

நேற்றிரவு ஆர்சிபிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி 19 ஓவர்களில் (மழை காரணமாக குறைப்பு) 209/3 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆர்சிபி 19 ஓவர்களில் 203/6 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

இந்தப் போட்டியில் லக்னௌ அணியின் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 56 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 9 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் அடித்திருந்தார். ஆட்ட நாயகன் விருது வென்ற பிறகு மிட்செல் மார்ஷ் பேசியிருப்பதாவது:

இந்த சீசன் மிகவும் கடினமாகவே சென்றுள்ளது. இந்த முறை போட்டியின் சரியான பக்கம் இருந்ததுக்கும் வெற்றி கிடைத்ததுக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களது மனவுறுதிக்கு இந்த வெற்றி முக்கியமானது. வருத்தமளிக்கும் சீசனாக இருந்தாலும் இன்னும் சில போட்டிகள் இருக்கின்றன.

முன்பு விளையாடிய ஆடுகளத்தை விட இது நன்றாக இருக்குமென சில இந்திய வீரர்கள் என்னிடம் கூறினார்கள். முடிந்த அளவுக்கு பவர்பிளேவில் ரன்களை குவிக்க முயற்சித்தோம். நல்ல தொடக்கத்துக்காக நானும் அதிரடியாக ஆடினேன். இதுவரை நாங்கள் பவர்பிளேவில் சரியாக விளையாடமால இருந்தோம். இன்று என்னால் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது.

மும்பையிடம் 10-15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். இன்று தைரியமாக பந்துவீசினோம். ஆர்சிபியும் நல்ல அணி. கடைசிவரை பேட்டிங் ஆடும் பலம் கொண்டவர்கள்.

இந்தப் போட்டியில் கடைசி ஓவர் வரைக்கும் சென்றது. இந்த இலக்கை கட்டுப்படுத்திய இந்திய பந்துவீச்சாளர்களை நினைத்து பெருமையாக இருக்கிறது என்றார்.

அடுத்த போட்டியில் லக்னௌ அணி சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியுடன் விளையாடவிருக்கிறது.

Summary

Player of the Match Mitchell Marsh interview after beat rcb at home ground

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.