ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலில் விளையாடியது.
சதம் விளாசிய மிட்செல் மார்ஷ்; ஆர்சிபிக்கு 210 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 14 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 145 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின், ஆட்டம் மழையால் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர், போட்டி 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
19 ஓவர்களில் லக்னௌ அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் சதம் விளாசி அசத்தினார். அவர் 56 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். நிக்கோலஸ் பூரன் 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். கேப்டன் ரிஷப் பந்த் 10 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
க்ருணால் பாண்டியா, ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ராஷிக் சலாம் தர் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்குகிறது.
The match between Royal Challengers Bangalore and their opponents in the IPL series has been halted due to rain.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொதப்பிய டாப் ஆர்டர், பந்துவீச்சில் அசத்திய ஆர்சிபி; 2-வது சாம்பியன் பட்டம் யாருக்கு?

குவாலிஃபையர் 1: ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!

மிட்செல் மார்ஷ் அபாரம்! ராஜஸ்தானுக்கு 221 ரன்கள் இலக்கு!

ஜோஷ் இங்லிஷ் அதிரடி; சிஎஸ்கேவுக்கு 204 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




