ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்ய, லக்னௌ முதலில் விளையாடியது.
ஆர்சிபி அபார பந்துவீச்சு; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த லக்னௌ!
முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 32 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, முகுல் சௌதரி 39 ரன்களும், ஆயுஷ் பதோனி 38 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
ஆர்சிபி தரப்பில் ராஷிக் சலாம் தர் 4 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். க்ருணால் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது.
Summary
Batting first in their IPL match against Royal Challengers Bangalore, Lucknow Super Giants were bowled out for 146 runs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!

மிட்செல் மார்ஷ் சதம் விளாசல்; ஆர்சிபிக்கு 210 ரன்கள் இலக்கு!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!

லக்னௌவுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் மீண்டும் ஹேசில்வுட்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK




