பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

15 வயது சிறுவனைப் பார்த்து பயப்படுவேன் என நினைக்கவில்லை: ஜேமிசன்

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து தில்லி வீரர் கைல் ஜேமிசன் பேசியிருப்பதாவது...

Vaibhav Suryavanshi, Kyle Jamieson.

வைபவ் சூர்யவன்ஷி, கைல் ஜேமிசன். - படங்கள்: ஏபி, பிசிசிஐ.

Published On :

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து தில்லி வீரர் கைல் ஜேமிசன், “15 வயது சிறுவனைப் பார்த்து பயப்படுவேன் என நான் நினைத்ததே இல்லை” எனக் கூறியுள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 225/6 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தில்லி அணி 19.1 ஓவர்களில் 226/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் அதிரடியான தொடக்க வீரர் சூர்யவன்ஷி (15 வயது) 1.5ஆவது பந்தில் கைல் ஜேமிசன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை ஆக்ரோஷமாக கொண்டாடியதற்காக கைல் ஜேம்சனுக்கு ஒரு தகுதி இழப்புப் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டிக்குப் பிறகு கைல் ஜேமிசன், “நான் ஒரு 15 வயது சிறுவனைப் பார்த்து பயப்படுவேன் என நினைத்ததே இல்லை. நல்லவேளையாக எங்களது திட்டம் பலித்தது. மற்ற அணிகள் ராஜஸ்தானின் தொடக்க வீரர்களைக் குறித்து அஞ்சுகிறார்கள்.

மிட்செல் ஸ்டார்க் ஃபுல்டாஸ் பந்தில் ஒரு விக்கெட், யார்க்கர் பந்தில் நான் ஒரு விக்கெட்டை எடுத்து பவர்பிளேவில் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கினோம். ஸ்டார்க் போன்ற ஒரு வீரர் அணியில் இணைந்தது கூடுதல் பலம் என்றார்.

Summary

The Fear. The Plan. The Execution, ft. Kyle Jamieson about 15 year old kid sooryavanshi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.