உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

அபிஷேக் சர்மா, ஆண்ட்ரே ரஸ்ஸலை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் சூர்யவன்ஷி!

அபிஷேக் சர்மா, ஆண்ட்ரே ரஸ்ஸலை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ள வைபவ் சூர்யவன்ஷியைப் பற்றி...

News image

வைபவ் சூர்யவன்ஷி.

Updated On :29 ஏப்ரல் 2026, 9:04 am

அபிஷேக் சர்மா, ஆண்ட்ரே ரஸ்ஸலை பின்னுக்குத் தள்ளி சாதனைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, பெங்களூரு, தில்லி உள்பட இந்தியா முழுவதும் உள்ள 14 நகர்களில் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு நியூ சண்டீகர் முல்லான்பூரில் நடைபெற்ற லீக் சுற்றின் 40-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்த நிலையில், சேஸிங் செய்த ராஜஸ்தான் அணி, 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இழக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் தோல்வியைத் தழுவாத பஞ்சாப் அணி முதல்முறையாக தோல்வியடைந்தது.

முன்னதாக, ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் 15 வயதான சூர்யவன்ஷி 16 பந்துகளில் 3 பௌண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 43 ரன்கள் விளாசி அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.

இந்தத் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் 400 ரன்களைக் குவித்து நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து ஆரஞ்சு தொப்பியையும் தனதாக்கியிருக்கிறார்.

நடப்பு தொடரில் குறைந்த பந்துகளில் அதிவேகமாக 400 ரன்களை எட்டியவர் என்ற சாதனையையும் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் 400 ரன்களை எட்டியவர்கள்

  • 167 பந்துகள் – வைபவ் சூர்யவன்ஷி (2026)

  • 188 பந்துகள் – ஆண்ட்ரே ரஸ்ஸல் (2019)

  • 195 பந்துகள் – அபிஷேக் சர்மா (2024)

  • 197 பந்துகள் – நிக்கோலஸ் பூரன் (2025)

  • 200 பந்துகள் – க்ளென் மேக்ஸ்வெல் (2014)

Vaibhav Sooryavanshi continues to rewrite the script of IPL 2026. The 15-year-old Rajasthan Royals opener added another record to his growing list, becoming the fastest player to 400 runs in an IPL.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.