ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் ஓய்வறையில் இ-சிகரெட் பிடிக்கும் விடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.
ஐபிஎல் தொடரின் 40 ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேற்றிரவு ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்த நிலையில், சேஸிங் செய்த ராஜஸ்தான் அணி, 20வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 16 ஆவது ஓவரில் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, ஓய்வறையில் இருந்த ரியான் பராக் சக வீரர்களான துருவ் ஜுரேல் மற்றும் ஜெய்ஸ்வாலுடன் பேசியபடி, இ-சிகரெட் பிடிக்கும் காட்சி நேரலையில் வெளியானது.
இந்தியாவில் 'இ-சிகரெட்' பயன்படுத்துவது 'மின்னணு சிகரெட் தடைச் சட்டம் 2019'படி சட்டவிரோதமானது. நாட்டில் இ-சிகரெட் உற்பத்தி, விற்பனை, இறக்குமதி மற்றும் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஐபிஎல் விதிகளின்படி, ஓய்வறை, திடல் உள்ளிட்ட பகுதிகளில் புகைப்படிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரியான் பராக்கின் நடவடிக்கை பிசிசிஐ விதிமுறைகளை மீறியதுடன், சட்ட ரீதியிலான குற்றச் செயலாகவும் அமைந்துள்ளது.
இதனால் விளையாட்டைக் கடந்து ரியான் பராக் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
IPL 2026: Riyan Parag Caught Vaping in the Dressing Room!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முத்தரப்பு தொடர்: இந்திய அணியில் ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்!

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

எங்களது மிடில் ஆர்டர் பேட்டிங் பற்றி கவலையில்லை: ரியான் பராக்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



