12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

எங்களது மிடில் ஆர்டர் பேட்டிங் பற்றி கவலையில்லை: ரியான் பராக்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் பேட்டி குறித்து...

Guwahati, Apr 07 (ANI): Rajasthan Royals' skipper Riyan Parag plays a shot during the Indian Premier League 2026 match against Mumbai Indians at Barsapara Cricket Stadium, in Guwahati on Tuesday. (ANI Photo)

ரியான் பராக். - ANI

Published On :

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் (24 வயது) தங்களது மிடில் ஆர்டர் பற்றி கவலையில்லை எனக் கூறியுள்ளார்.

நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 222/4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 228/4 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக, கேப்டன் ரியான் பராக் 29 ரன்கள், டோனவன் ஃபெரேரா 52* ரன்கள், ஷுபம் துபே 31* ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.

இந்த சீசனில் இதுவரை தோல்வியே சந்திக்காத பஞ்சாப் கிங்ஸை ராஜஸ்தான் வீழ்த்தி அசத்தியுள்ளது. முன்னதாக, மிடில் ஆர்டர் பேட்டிங்கில் சொதப்பி வந்ததால் இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, கேப்டன் ரியான் பராக் கூறியிருப்பதாவது:

அணியாக நாங்கள் என்ன திட்டமிட்டமோ அதற்கான போட்டியாக இதை எடுத்துக்கொள்ளலாம். கடைசி போட்டியில் நாங்கள் செய்த தவறுகள், பிழைகள் எல்லாவற்றையும் இன்று சரியாக செய்தோம். கொஞ்சம் குறைவான ரன்களிலே நாங்கள் பஞ்சாபை கட்டுப்பதினோம் என நினைக்கிறேன். அடுத்த போட்டியில் இன்று விளையாடியதைக் குறித்து விமர்சித்து முன்னேறுவோம்.

எங்களை விட மற்றவர்களுக்குதான் மிடில் ஆர்டர் பிரச்னையாக இருக்கிறது. எல்லாருமே பார்க்கிறார்கள்; கருத்து தெரிவிக்கிறார்கள். நாங்கள் எங்களது வீரர்களை அவர்களது திறமைகளை நம்புகிறோம்.

மிடில் ஆர்டர் விளையாடாதபோது, நம்.3 அல்லது லோயர் ஆர்டர் பேட்டர்கள் அடிக்க வேண்டும். அதனால், அணியாக எங்களுக்கு ஓவ்வொருவர் மீதும் நம்பிக்கை இருக்கிறது. அனைத்து கவலைகளும் வெளியே இருப்பவர்களுக்குதான் இருக்கிறது; எங்களுக்கு அல்ல எனக் கூறினார்.

Summary

That was their concerns, not our concerns says RR captain Riyan Parag about Middle Order batting.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.