மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து ஹார்திக் பாண்டியா பதிலளித்துள்ளார்.
வான்கடேவில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
வான்கடேவில் ஏப்.12ஆம் தேதி நடைபெற்ற ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் வலது பக்க தொடை தசையில் காயம் ஏற்பட்டது. இந்தக் காயத்தினால் அவர் போட்டியில் இருந்து ரிடையர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
ரோஹித் சர்மா நல்ல ஃபார்மில் இருந்து, காயத்தினால் வெளியேறியதால் தொடக்க வீரருக்காக மும்பை இந்தியன்ஸ் தடுமாறி வருகிறது.
தற்போது, வில் ஜாக்ஸ் ரோஹித் சர்மா இடத்தில் களமிறக்கப்படுகிறார். முன்னதாக களமிறங்கிய இளம் வீரர் டேனிஷ் மலேவர் மோசமாக விளையாடியதால் புதிய தொடக்க வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பேசியிருப்பதாவது:
பேட்டிங் செய்கிறோம். ஈரப்பதம் குறித்து கவலையில்லை. அணியாக நல்ல முறையில் தயாராகி வருகிறோம். ரோஹித் சர்மா இன்னும் சில போட்டிகளில் விளையாட மாட்டார். அவர் குணமடைய முயற்சி செய்து வருகிறார். இருப்பினும் எப்போது அவர் விளையாடுவார் என்பதைக் கூற முடியாது என்றார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மா, 276 போட்டிகளில் 7,183 ரன்கள் எடுத்துள்ளார்.
Summary
When will Rohit Sharma play? The Mumbai captain answers!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா புதிய சாதனை!

முழு உடல்தகுதி பெற்ற ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்டியா; ஒருநாள் தொடருக்குத் தயார்!

மும்பை இந்தியன்ஸ் தோற்றது ஏன்?: ஒரு பார்வை

முந்தையப் போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடியிருந்தால்... ஹர்பஜன் சிங் கூறுவதென்ன?
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



