திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா புதிய சாதனை!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்து ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார்.

News image

ரோஹித் சர்மா - படம் | AP

Updated On :13 ஏப்ரல் 2026, 12:33 pm

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்து ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நேற்று (ஏப்ரல் 12) நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 6000 ரன்களைக் கடந்து அவர் சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக அதிக ரன்கள் குவித்துள்ள வீரர்கள் விவரம்

8840 ரன்கள் - விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

6002* ரன்கள் - ரோஹித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்)

4865 ரன்கள் - எம்.எஸ்.தோனி (சென்னை சூப்பர் கிங்ஸ்)

4687 ரன்கள் - சுரேஷ் ரெய்னா (சென்னை சூப்பர் கிங்ஸ்)

4491 ரன்கள் - ஏபி டி வில்லியர்ஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சீசனில் 4 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Rohit Sharma has set a record by scoring the most runs for the Mumbai Indians.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.