மும்பை இந்தியன்ஸ் அணி ஜஸ்பிரித் பும்ராவை அதிகம் நம்பியிருக்கக் கூடாது என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நேற்று (ஏப்ரல் 12) நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி அதன் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது. அதன் பின், தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஜஸ்பிரித் பும்ராவை அதிகம் நம்பியிருக்கக் கூடாது என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியவதாவது: 250 அல்லது அதற்கும் மேல் ரன்கள் குவிக்கப்படும் போட்டிகளை எடுத்துக் கொண்டால், மும்பை இந்தியன்ஸ் அணி ஜஸ்பிரித் பும்ராவின் நான்கு ஓவரைத் தாண்டி என்ன செய்யலாம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். பும்ரா வீசக்கூடிய நான்கு ஓவர்களில் அதிகம் ரன்கள் கொடுக்க மாட்டார். பும்ராவின் நான்கு ஓவர்களை தவிர்த்து, மற்ற வீரர்களும் நன்றாக பந்துவீச வேண்டும்.
ஆட்டத்தின் முக்கியமான தருணங்களில் ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், ஒரு அணியிடம் பேட்டிங் வரிசை மிகவும் வலுவாக இருக்கிறது என்றால், பும்ராவை எங்கு பயன்படுத்தினாலும் அந்த அணிக்கு பெரிய அளவில் அழுத்தம் இருக்காது. அதனால், பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு விடை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் எதுவும் எடுக்காதது குறிப்பிடத்தக்கது.
Summary
Former South African player Faf du Plessis has stated that the Mumbai Indians should not rely too heavily on Jasprit Bumrah.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு; கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா!

மும்பை இந்தியன்ஸ் சிறப்பாக செயல்படாததன் காரணம் என்ன? தலைமைப் பயிற்சியாளர் விளக்கம்!

கடைசி இடத்துக்குக் கீழிறங்காமல் நூலிழையில் தப்பித்த மும்பை இந்தியன்ஸ்!







