மும்பையின் தொடர் தோல்விகள் குறித்து, நாங்கள் சீராக செயல்படவில்லை என்று அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (மே 10) நடந்த இரண்டாவது போட்டியில், முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன் காரணமாக, மும்பை அணி விளையாடிய 11 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வென்றது. இந்த நிலையில், மும்பை அணி தனது ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.
இதுகுறித்து பேசிய ஜெயவர்தனே தெரிவித்ததாவது:
”இந்த சீசன் எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. நாங்கள் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் போதுமான அளவு சீராகச் செயல்படவில்லை. அதுவே எங்களுடைய தோல்விகளுக்கான காரணம்.
உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், எங்களுடைய வீரர்கள் சிலர் காயமடைந்தனர். மேலும், சில வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
எங்கள் முக்கிய வீரர்கள் ஆட்டமிழக்காமல் தொடர்ந்து களத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால், காரணங்கள் சொல்ல விரும்பவில்லை. எங்களிடம் ஒரு தரமான அணி இருந்தது என்றே நான் நினைக்கிறேன். எனவே, ஒட்டுமொத்தமாக நாங்கள் போதுமான அளவு சிறப்பாக செயல்படவில்லை என்பதுதான் பிரச்னை” எனத் தெரிவித்தார்.
Summary
Regarding Mumbai's string of defeats, the team's head coach, Jayawardene, has stated that they have not performed consistently.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடைசி இடத்துக்குக் கீழிறங்காமல் நூலிழையில் தப்பித்த மும்பை இந்தியன்ஸ்!

தொடர் தோல்விகளுக்கு மத்தியில் புதிய உலக சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்!

மும்பைக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

4ஆவது முறையாக தொடக்க வீரர்களில் மாற்றம் செய்த மும்பை இந்தியன்ஸ்..! 2012 சீசன் திரும்புகிறதா?
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை


