ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அனியின் சிறப்பான பேட்டிங்குக்கு காரணம், பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக்தான் என ஆர்சிபி ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (மே 10) நடந்த இரண்டாவது போட்டியில், முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் காலில் கடுமையான தசைப்பிடிப்பால் அவதிப்பட்டும், ஏறக்குறைய ஒற்றைக் காலில் நின்றுகொண்டும் பேட்டிங் செய்த க்ருணால் பாண்டியா, 46 பந்துகளில் 73 ரன்கள் விளாசி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இதுகுறித்து ஆட்டத்துக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் க்ருணால் பாண்டியா தெரிவித்ததாவது:
“அணியின் செயல்திறனில் கடந்த ஆண்டை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்தாண்டு ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், சிறப்பான பேட்டிங்குக்கான பாராட்டுகள் அனைத்தும் தினேஷ் கார்த்திக்கையேச் சேரும்.
அவர் ஒவ்வொரு வீரருடனும் தனிப்பட்ட முறையில் அதிக நேரம் செலவழிக்கிறார். அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொண்டு, அவற்றைச் சரிசெய்கிறார். பேட்டர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கிறார். எனவே, எங்கள் அணியின் சிறப்பான ஆட்டத்த்துக்கு, தினேஷ் கார்த்திக்கின் பங்கு பெருமளவில் உண்டு என்பதில் சந்தேகமில்லை.
எங்களால் ரன்கள் அடிக்க முடியும் என்று நாங்கள் உணரும் ஒரு பந்துவீச்சாளர் இருந்தால், அவர் வீசும் ஆறு பந்துகளையும் சரியாக எதிர்கொண்டு விளையாடுவோம் என்று பேசியிருக்கிறோம்.
அந்தச் சூழ்நிலையில்தான், நான் களத்தில் இருந்தேன். ஆனால் தசைப்பிடிப்புகள் காரணமாக, ஒன்றிரண்டு ரன்கள் எடுப்பது கடினமாகி வருவதை உணர்ந்தேன். அதனால், ’அப்படியே நின்று ஆறு பந்துகளையும் எதிர்கொண்டு, என்னால் முடிந்ததை எல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வோம்' என்று நினைத்தேன்” எனத் தெரிவித்தார்.
Summary
RCB all-rounder Krunal Pandya has stated that batting coach Dinesh Karthik is the reason behind the Royal Challengers Bangalore team's excellent batting performance.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேட்டர்களின் சவாலை சமாளிப்பது எப்படி? க்ருணால் பாண்டியா பதில்!

ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் சாதனை; விராட் கோலிக்கு க்ருணால் பாண்டியா புகழாரம்!

ஆடுகளத்தில் குறையல்ல; பந்துவீச்சில் அசத்திய ஆர்சிபி: க்ருணால் பாண்டியா

சாதனைப் பட்டியலில் இடம்பிடித்த ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா!
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை


