திமுக எம்எல்ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

பேட்டர்களின் சவாலை சமாளிப்பது எப்படி? க்ருணால் பாண்டியா பதில்!

ஐபிஎல் தொடரில் பேட்டர்களின் சவாலை சமாளிப்பது எப்படி என்பது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா பேசியுள்ளார்.

News image

க்ருணால் பாண்டியா - படம் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (எக்ஸ்)

Updated On :7 மே 2026, 4:57 pm IST

ஐபிஎல் தொடரில் பேட்டர்களின் சவாலை சமாளிப்பது எப்படி என்பது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் லக்னௌவில் இன்று (மே 7) நடைபெறும் 50-வது போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் பேட்டர்களின் சவாலை சமாளிப்பது எப்படி என்பது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரை உற்றுக் கவனித்திருந்தால் கடந்த 10 ஆண்டுகளில் பேட்டர்கள் பந்தை அடித்து விளையாடும் விதம் பெரிய அளவில் மாறியிருப்பதை கவனித்திருக்கலாம். பேட்டர்கள் அதிரடியாக விளையாடும் விதம் அதிகரித்துள்ளது. ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமாகும் வீரர்கள் மிகவும் எளிதாக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் விளாசுகிறார்கள். அதனால், பந்துவீச்சாளர்கள் அவர்களது பந்துவீச்சில் நிறைய வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

பேட்டர்களைக் காட்டிலும் பந்துவீச்சாளர்கள் ஒருபடி அதிகமாக சிந்திக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள். அதன் காரணமாகவே, என்னுடைய பந்துவீச்சில் பௌன்சர்கள் மற்றும் யார்க்கர்களை உங்களால் பார்க்க முடிகிறது. என்னுடைய பந்துவீச்சில் ஒரே நாளில் திடீரென மாற்றங்களை கொண்டு வந்துவிடவில்லை என்றார்.

Summary

Royal Challengers Bangalore all-rounder Krunal Pandya has spoken about how to tackle the challenge posed by batters in the IPL.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.