முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ரோஹித் சர்மா, விராட் கோலி வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

டி20 போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

Sanju Samson

சஞ்சு சாம்சன் - படம் | சென்னை சூப்பர் கிங்ஸ் (எக்ஸ்)

Published On :

டி20 போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 23 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தியது. நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியையும் பதிவு செய்தது.

இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி சதம் விளாசி அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறிய சஞ்சு சாம்சன், நேற்றையப் போட்டியில் 56 பந்துகளில் 115* ரன்கள் (15 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

நேற்றைய ஆட்டத்தில் நான்கு சிக்ஸர்கள் விளாசியதன் மூலம், டி20 போட்டிகளில் 400 சிக்ஸர்கள் விளாசியுள்ள 4-வது இந்திய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார். இந்த வரிசையில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா 554 சிக்ஸர்கள், சூர்யகுமார் யாதவ் 442 சிக்ஸர்கள் மற்றும் விராட் கோலி 441 சிக்ஸர்கள் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Sanju Samson, the Indian team's opening batsman in T20 matches, has set a new record.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.