ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

பகை அல்ல நட்புதான்... கிளாசனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

சிஎஸ்கே வீரர் சஞ்சு சாம்சன் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு குறித்து...

News image

சஞ்சு சாம்சன், ஹென்ரிச் கிளாசன். - படம்: இன்ஸ்டா / சஞ்சு சாம்சன்.

Updated On :20 மே 2026, 3:25 pm IST

சிஎஸ்கே வீரர் சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரர் ஹென்ரிச் கிளாசனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

சிஎஸ்கே அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் - கிளாசன் இடையே மோதல் ஏற்பட்டது.

நூர் அகமது வீசிய பந்தில் கிளாசன் முன்னோக்கி நகர்ந்து விளையாட, சஞ்சு சாம்சன் அசத்தலாக ஸ்டம்பி செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மூன்றாம் நடுவரிடம் சென்று விக்கெட் உறுதி செய்யப்பட்டது.

கிளாசன் ஆடுகளத்தை விட்டு கிளம்புமோது சஞ்சு சாம்சனை ஏதோ கோபமாக சொல்லிவிட்டு செல்வார். சாம்சன் முறைத்துக்கொண்டே இருந்தார்.

இந்த நிலையில், சாம்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில், “ஆடுகளத்தில் சில விஷயங்கள் நடந்துவிடும். ஆனால், இந்த நல்ல மனிதன் மீது அன்பும் மரியாதையும் இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

இதனைப் பகிர்ந்த கிளாசன்,”கூடுதல் அன்புடன்... உங்கள் மீது மரியாதை இருக்கிறது. நீங்கள் விளையாடுவதைப் பார்ப்பது எப்போதும் மகிழ்ச்சியே. நீங்கள் செய்வதை தொடருங்கள். நாங்கள் நன்றாக இருக்கிறோம். நமது அடுத்த போட்டிக்காக காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Summary

It is not enmity; it is friendship. Sanju Samson's Instagram story for Heinrich Klaasen

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.