சிஎஸ்கே அணிக்காக சஞ்சு சாம்சன் தனது முதல் சீசனிலேயே இரண்டு சதங்கள் அடித்து ஷேன் வாட்சன் சாதனையை சமன்செய்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றிலேயே சிஎஸ்கே அணிக்காக ஒரே சீசனில் இரண்டாவது சதம் அடிக்கும் இரண்டாவது வீராரக சஞ்சு சாம்சன் இருக்கிறார். முன்னதாக, ஷேன் வாட்சன் 2018 சீசனில் அடித்திருந்தார்.
நேற்றிரவு வான்கடேவில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 207/6 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய மும்பை 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாகவும் தேவையானபோது நிதானமாகவும் விளையாடி 54 பந்துகளில் 101 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.
மும்பைக்கு எதிராக சதம் அடித்த முதல் சிஎஸ்கே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளார். 19 ஆண்டுகாலத்தில் மும்பைக்கு எதிராக இவ்வளவு வலுவாக சிஎஸ்கே அணி விளையாடியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் நிகழ்த்திய சாதனைகள்
1. மும்பைக்கு எதிராக சதம் அடித்த முதல் சிஎஸ்கே வீரர்
2. ஒரே சீசனில் இரண்டாவது சதம் அடித்த 2ஆவது சிஎஸ்கே வீரர்
3. டி20யில் அதிக சதமடித்த இந்தியர்கள் பட்டியலில் 2ஆம் இடத்தை ரோஹித் சர்மா, அபிஷேக் சர்மாவுட பகிர்ந்துகொண்டுள்ளார். விராட் கோலி 9 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
4. ஐபிஎல் வரலாற்றில் கடைசி பந்தில் சதம் அடித்தவர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் 3ஆவது நபராக இணைந்துள்ளார். முன்னதாக மெக்கல்லம் (2015), திலக் வரமா (2026) இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார்கள்.
Summary
The First CSK Player to Score a Century Against Mumbai! Multiple Records Set by Sanju Samson!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மைல்கல்கள் சிறப்பானதுதான்; ஆனால்... மனம் திறந்த சஞ்சு சாம்சன்!

நான் ஒரு பம்பரம் சாம்பியன்: சஞ்சு சாம்சன்

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

சஞ்சு சாம்சன் பேட்டிங் குறித்து கவலையில்லை: சிஎஸ்கே பயிற்சியாளர்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

