பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

அபிஷேக் சர்மா எளிதாக சதங்கள் விளாசுகிறார்: புஜாரா

சதங்கள் விளாசுவது மிகவும் எளிது என்பதைப் போல அபிஷேக் சர்மா சதம் விளாசுவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சித்தேஸ்வர் புஜாரா அவரைப் பாராட்டியுள்ளார்.

News image

அபிஷேக் சர்மா - படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :22 ஏப்ரல் 2026, 9:37 am

சதங்கள் விளாசுவது மிகவும் எளிது என்பதைப் போல அபிஷேக் சர்மா சதம் விளாசுவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சித்தேஸ்வர் புஜாரா அவரைப் பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 68 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசிய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அபிஷேக் சர்மா மிகவும் சிறப்பான திறமை கொண்டவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சித்தேஸ்வர் புஜாரா அவரைப் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா ஐபிஎல் தொடரில் இரண்டாவது முறையாக சதம் விளாசியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அவரது முதல் சதத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் மிகவும் எளிதாக சதங்கள் விளாசுகிறார். அவர் ரன்கள் குவிப்பது சன்ரைசர்ஸ் அணிக்கு மிகவும் முக்கியம். ஏனெனில், அவர் ரன்கள் குவிக்கும்போது அணி வெற்றி பெறுகிறது. அவர் மிகவும் சிறப்பான திறமை கொண்ட வீரர். வெகு சில பேட்டர்களிடத்திலேயே அபிஷேக் சர்மா போன்று சிறப்பான திறமை உள்ளது என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் சர்மா, 323 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Former Indian cricketer Cheteshwar Pujara has praised Abhishek Sharma, remarking that he scores centuries as if it were an effortless task.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.