நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

சுற்றுப்புற சுகாதாரத்தை வலியுறுத்தி 7 கி.மீ. பின்னோக்கி நடந்து பள்ளி மாணவர் உலக சாதனை முயற்சி

திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்களிடையே சுற்றுப்புற சுகாதாரம், தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தனியார் பள்ளி

Updated On :19 ஏப்ரல் 2018, 1:37 am IST

திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்களிடையே சுற்றுப்புற சுகாதாரம், தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தனியார் பள்ளி மாணவர் 7 கி.மீ. தொலைவு பின்னோக்கி நடந்து சென்று உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருபவர் ஜி.சிவகுரு (11). யோகா பயிற்சி பெற்ற இவர், மாவட்ட பொதுமக்களிடையே சுற்றுப்புற சுகாதாரம், தூய்மை இந்தியா திட்டம் ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார்.
அதன்படி, 7 கி.மீ. தொலைவு பின்னோக்கி நடந்து சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், உலக சாதனை முயற்சியிலும் அவர் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இருந்து தொடங்கிய இந்த சாதனை முயற்சி தொடக்க விழாவுக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் மாநிலத் தலைவர் ஆர்.ரோஷன்லால் தலைமை வகித்தார்.
சர்வதேச மனித உரிமைக் கழக விழுப்புரம் மாவட்டத் தலைவர் ஏ.ஆர்.பாலமுருகன், சுவாமி விவேகானந்தா யோகா, ஸ்கேட்டிங் கழக நிர்வாகி எஸ்.சுரேஷ்குமார், ஜெய்சிவ் அகாதெமி நிறுவனர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை ஸ்ரீசரஸ்வதி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் பி.கணேசன் வரவேற்றார்.
மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவரின் உலக சாதனை முயற்சியை தொடக்கி வைத்தார்.
இதையடுத்து, ஆட்சியர் அலுவலகம் எதிரில் இருந்து நகரின் மையப் பகுதியில் உள்ள ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் வரையில் சுமார் 7 கி.மீ. தொலைவுக்கு மாணவர் சிவகுரு பின்னோக்கி நடந்து சென்று பொதுமக்களிடையே சுற்றுப்புற சுகாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும், தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சுவாமி விவேகானந்தா யோகா, ஸ்கேட்டிங் கழகம், ஸ்ரீசரஸ்வதி விகாஸ் மெட்ரிக் பள்ளி இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், எல்ஐசி வளர்ச்சி அலுவலர் பி.பாபு, தொழிலதிபர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.