ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு!
/

வாழை - 2 படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா?

வாழை - 2 திரைப்படம் குறித்து...

News image

மாரி செல்வராஜ், இளையராஜா

Updated On :25 மே 2026, 4:10 pm IST

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கு வாழை - 2 திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க உள்ளாராம்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமானது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் உணர்வுப்பூர்வமாக பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, இவர் இயக்கிய பைசன் திரைப்படம் வெற்றி பெற்றதால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பட்டியலில் இணைந்தார். இதுவரை தோல்விப்படமே கொடுக்காத இயக்குநராகவும் அறியப்படுகிறார்.

அடுத்ததாக, நடிகர் தனுஷை வைத்து வரலாற்றுத் திரைப்படமொன்றை எடுக்கவுள்ளார்.

ஆனால். தனுஷ் படத்திற்கு முன் வாழை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளதாகவும் இதில் நடிகர்கள் கதிர், கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழை முதல் பாகத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

It is reported that composer Ilaiyaraaja will be composing the music for the film Vaazhai - 2, directed by Mari Selvaraj.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.