திருவண்ணாமலையில் ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆர்.சீத்தாராமன், மாவட்டப் பொருளாளர் கே.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டலத் தலைவர் வி.சுரேஷ் வரவேற்றார்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்துப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.சார்லஸ், மாநிலப் பொதுச் செயலர் வி.வேல்முருகன், மாவட்டத் தலைவர்கள் கவிச்செல்வன் (விழுப்புரம்), சரவணன் (வேலூர்) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் தமிழக கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர்கள், துப்புரவுப் பணியாளர்கள், இதரப் பணியாளர்களை ஒன்றிணைத்து 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் ஒரு லட்சம் பணியாளர்களைக் கொண்டு மிகப் பெரிய மாநில மாநாட்டை நடத்துவது, அந்த மாநாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து அனைத்துப் பணியாளர்களும் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சங்க
நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவித்தொகையுடன் தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி!
ரவி மோகன் வீட்டில் ரூ. 10 லட்சம் வைர நகை, பணம் திருட்டு!

இன்றைய தங்கம், வெள்ளி விலை குறைந்தது! (ஜூன் 24)

சினிமாச் சந்தையில் முப்பது ஆண்டுகள்! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


